முகப்பு

‘இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்,

பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்’

-மகாகவி பாரதி

 

பார்வைக்கும் படிப்பதற்கும் மட்டும் அல்ல பங்களிப்பிற்கும் உங்கள் பகிர்வுக்கும்!

உங்கள் வீட்டுக்கதவுக்கு முன்னர் அல்லது மதில் சுவர் மறைத்திட்ட பெருவீட்டின் கம்பிக்கதவுக்கு முன்னர் யாரோ ஒரு பிச்சைக்காரர் அம்மா தாயே பிச்சைப்போடுங்கம்மா என்று நிற்கின்றாரா அல்லது குடுகுடுப்பை ஒலியுடன் உங்க வீட்டுக்கொரு நல்ல காலம் பிறக்கப் போகுது என்று ஒரு குடுகுடுப்பைக்காரர் அல்லது பூம்பூம் மாடு கொண்டு நிற்கின்றாரா?

அவரை சற்று உற்று நோக்கி உங்கள் கருணையின் வெளிப்பாட்டில் ஒன்றிரண்டு சில்லரைகளையோ, உங்கள் வீட்டாரல் உண்ணமுடியாது அல்லது உடுத்தமுடியாது போன ஏதோ ஒரு பொருளுடன் நீங்கள் கொடுக்க முற்படும்படியான இரக்கமனம் கொண்ட கொடைவள்ளல் பெருமகளாக, பெருமகனாக, நீங்கள்!

கேளுங்கள்…!
கல் தோன்றி மண் தோன்றி என்றெல்லாம் பழங்கதை பேச மட்டும் இல்லை பழமையுள் அதன் புதுமையை உலகம் அறிய நாம் எடுத்துவரும் முயற்சிகள் ஏராளம் ஏராளம்! அதற்காக நாம் அடைந்துவரும் இழப்புகளும் ஏராளம் ஏராளம்…!
எந்த ஒரு சொந்த வாழ்வுப் பயன்களுக்கெனவும் நாம் இவற்றை செய்யவில்லை!
எம்முடைய வினைப்பயன் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு கட்டாயம்!

உங்கள் எண்ணத்தின் உண்மைக் கருணை இவ்வளவு என்பதனைக் கொண்டு தீர்மானிக்கவில்லை ஆனால் பொருள் வெறி பிடித்த இந்த உலகில் மற்றவற்றையும் நீங்கள் கருத்தில் கொண்டு கொடுங்கள் என்று உரிமையாக கேட்கின்றோம்!

நாங்கள் கேட்பது பிச்சையன்று !
தமிழரின் இலக்கணப்படி உயர்ந்தோர் – உரிமை!

ஈ,தா,கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி யாகிடன் உடைய!
அவற்றுள் ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே!
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே!
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே!
– தொல்காப்பியம

ஒரே ஒருவேளை உணவு  !
”ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் ”- என்று பாடிய அவ்வைப் பாட்டியின் குடிமரபினர் நாம் …!

என்பு என்பது யாக்கை என்பது
உயிர் என்பது இவைகள் எல்லாம்
பின்பு என்ப அல்ல; என்றும்
தம்முடைய நிலையின் பேரா:
முன்பு என்றும் உளது என்றாலும்
முழுவதும் தெரிந்த ஆற்றால்
அன்பு என்பது ஒன்றின் தன்மை
அமரரும் அறிந்தது அன்றே.

என்று அன்பு பற்றித் தேவராலும் கூறமுடியாது என்று  சொல்லுகின்ற கம்பரின் வரிகளைப் போல சொல்ல முடியாத நிலையிலும் நல்ல பல அன்புள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் , நல்லவை செய்ய இருக்கின்றார்கள்.

நல்லது செய்கிறோம்… செய்துகொண்டே இருப்போம்… நீங்களும் தொடர்ந்து பங்களியுங்கள்..

அன்புடன்,
வளவன்